#BiharElections2020 : இன்று பீகாரில் முதல் கட்ட தேர்தல்

இன்று பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 

243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் , சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.அதன்படி முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது. பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்தது.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.பீகார் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதாவது,  சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவிற்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறும். வாக்குப் பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.