ஜூலை-29ம் தேதி முதல் ஹஜ் பயணம் தொடக்கம்! கடும் நிபந்தனைகள் விதித்த சவூதி அரேபியா அரசு!

ஜூலை-29ம் தேதி முதல் ஹஜ் பயணம் தொடக்கம்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 14,852,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,613,213  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 29-ம் தேதி முதல், ஹஜ் புனித பயணம் துவங்கவுள்ளதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த பயணத்திற்கு சில நிபந்தனைகளையும் அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

அந்த நிபந்தனைகளின்படி, இந்த பயணத்திற்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதியில் அரேபியாவில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 253,349 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,523 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.