கேரளாவில் மனிதாபிமான புரட்சி.. ஒரு உயிரை காப்பற்ற கைகோர்த்த மலையாள தோழர்கள்!

Save Abdul Rahim

KERALA: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை 34 கோடி ரூபாய் கிரவுட் ஃபண்ட் திரட்டி மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான அப்துல் ரஹீம், கடந்த 2006ம் ஆண்டு  வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அப்போது ரஹீமுக்கு சவுதி அரேபியாவின் ரியாத்தில் வீட்டு டிரைவராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அந்த வீட்டில் உள்ள 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை பார்த்துக்கொள்ளும் பணியையும் ரஹீம் … Read more

அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும்… சவூதி அரசு அறிவிப்பு.!

இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.  இஸ்லாமியர்கள் புனித தலமான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் வருடந்தோறும் அரஃபா நாள் கொண்டாடப்படும். அதாவது நபிகள் நாயகம் இறுதியாக அரபா குன்றின் மேல் சொற்பொழிவு ஆற்றிய நாளை தான் அவர்கள் புனித நாளாக அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் அங்கு நடைபெறும் சொற்பொழிவானது இதுவரை 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. அப்படி, ஒலிபரப்பிய மொழிகளின் எண்ணிக்கை … Read more

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை விதித்த சவுதி அரேபியா….!

சாம் ரயாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். இயக்குனர் சாம் அவர்கள் டோபி மெக்யூர் நடித்த ஸ்பைடர் மேன் எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு உலகெங்கிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபிய அரசு இந்த … Read more

சவூதி:கொரோனா பரவல் காரணமாக சப்ளை வேலை செய்யும் ரோபோக்கள்…!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக சவூதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளை வேலைக்கு ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா பரவலானது கடந்த ஆண்டை விட,தற்போது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,சவூதி அரேபியாவின் ஜாசன் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மனிதர்களுக்குப் பதிலாக சப்ளை வேலைக்கு ரோபோக்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரோபோக்கள்,வாடிக்கையாளர்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றன.வாடிக்கையாளர்கள் என்ன ஆர்டர் செய்தார்களோ அவற்றை தாமதிக்காமல் உடனே கொண்டு … Read more

சவுதியில் கொரோனா தடுப்பு மருந்துக்கான பதிவு தொடக்கம்!

கொரோனா தடுப்புமருந்து பயன்படுத்துவதற்கான பதிவினை சவுதி அரேபிய அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் பயன்படுத்த திட்டம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரசை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்புமருந்து பயன்படுத்துவதற்கான பதிவினை சவுதி அரேபிய அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து, சவுதி அரேபிய … Read more

சவுதி அரேபிய இளவரசர்கள் 2 பேரை மன்னர் சல்மான் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கினார்.!

ராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கிடையேயான நிதி பரிவர்த்தனைகள் ஈடுபட்டதாக இரு இளவரசர்களை பதவி நீக்கம் செய்தற் மன்னர் சல்மான். இஸ்லாமியர்களின் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாப்பாளரும், சவூதி அரேபியாவின் மன்னருமான சல்மான் பின் அப்துல் அசிஸ், இரண்டு அரச குடும்ப உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து, ஊழல் தொடர்பான விசாணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டார். இதன்படி, ஏமனில் நடைபெற்று வரும் போரில் சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளின் தளபதியான இளவரசர் ஃபகத் பின் துர்கி, சவூதி அரேபியாவின் … Read more

ஜூலை-29ம் தேதி முதல் ஹஜ் பயணம் தொடக்கம்! கடும் நிபந்தனைகள் விதித்த சவூதி அரேபியா அரசு!

ஜூலை-29ம் தேதி முதல் ஹஜ் பயணம் தொடக்கம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 14,852,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,613,213  பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜூலை 29-ம் தேதி முதல், ஹஜ் புனித பயணம் துவங்கவுள்ளதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த பயணத்திற்கு சில நிபந்தனைகளையும் அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளின்படி, இந்த பயணத்திற்கு … Read more

84 வயதான சவுதி மன்னர் சல்மான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.!

சவூதி அரேபியாவின் 84 வயதான ஆட்சியாளர் கிங் சல்மான் பின் அப்துல் அஜிஸ் தலைநகர் ரியாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்தப்பை வீக்கத்தால் அவதிப்பட்டுள்ளார் என்று மாநில செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ இன்று தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரையும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடையும் 2015 முதல் ஆட்சி செய்த மன்னர் ஆவார் தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இஸ்லாத்தின் புனிதமான தளங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான், ராஜாவாக வருவதற்கு முன்பு ஜூன் 2012 முதல் சவுதி … Read more

ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகள்.!

இஸ்லாமியர்களின் முக்கிய தொழுகைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் குறித்து சவுதி அரசு ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளது. ஹஜ் புனித பயணம் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதினா நகருக்கு வருவது வழக்கம் . ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் அரேபியாவில் கொரோனா வைரஸ்பாதிப்பு அதிகரித்து வருவதால் கடந்த சில … Read more

23 லட்ச ரூபாய் மருத்துவ பாக்கியுடன் அரபு நாட்டில் சிக்கி தவித்து வரும் வேலையிழந்த இளைஞர்.!

 மேற்கு வங்கத்தை சேர்ந்த 27 வயதான பத்ரா எனும் இளைஞர் ஐக்கிய அரபு நாட்டுக்கு (சவூதி அரேபியா ) வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் வேலை இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவர் அந்நாட்டில் தரையிறங்கிய போதுதான் பத்ராவுக்கு தெரியவந்தது. அதன்பிறகு அவருக்கு வீட்டு வேலை கிடைத்தது. ஆனால் அங்கும் சரியான வருமானம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே தரப்பட்டதாக பத்ரா அந்நாட்டு செய்தி சேனலில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், … Read more