அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்! அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அங்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.