நடிகை சித்ரா தற்கொலை: கணவரிடம் 4-வது நாளாக தொடர் விசாரணை.!

நடிகை சித்ரா தற்கொலை: கணவரிடம் 4-வது நாளாக தொடர் விசாரணை.!

Default Image

நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கணவர் ஹேமந்திடம் நான்காவது நாளாக தொடர்ந்து தனி அறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்றும் ,கணவர் மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் தற்கொலைக்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்திருந்தது .

ஆனால் சித்ராவின் நண்பர்கள், குடும்பத்தினர் என பலர் சித்ரா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று கூறி வருகின்றனர்.இதனை தொடர்ந்து போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கும் நிலையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சித்ரா மரணம் தொடர்பாக கணவர் ஹேமந்திடம் தனி அறையில் வைத்து தொடர்ந்து 4-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இதனிடையே நேற்று சித்ரா கடைசியாக கலந்து கொண்ட படப்பிடிப்பில் பங்கேற்ற 5 பேரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube