திமுக வேட்பாளர் ஆஸ்டின் மனு மீதான வழக்கில் பதியளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி!!

மீண்டும் தபால் வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு மீது 30ம் தேதிக்குள் பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. 

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் தபால் வாக்கு முறைகேடு என்றும் மீண்டும் தபால் வாக்குப்பதிவு நடத்தக்கோரி திமுக வேட்பாளர் ஆஸ்டின் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தபோது, கன்னியாகுமரி தொகுதியில் முதியோருக்கான தபால் வாக்குப்பதிவில் ரகசியத்தன்மை இல்லை என திமுக வேட்பாளர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளரின் மனு மீது 30-ம் தேதிக்குள் பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்