திமுக தேர்தல் அறிக்கையில் காமெடியன் மட்டுமே உள்ளான்…. கதாநாயகன் கதாநாயகி இல்லை….

  • திமுக ஒரு வன்முறை கட்சி என குற்றம்சாட்டிய ராமதாஸ், செயல்படுத்த முடியாத திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளில் தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை சேத்துப்பட்டில் மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை அறிமுகம் செய்து பேசினார்.

இதனையடுத்து, அதிமுக – பாமக கூட்டணி கொள்கை கூட்டணி என்றும், நன்மை அளிக்கும் திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார். திமுக ஒரு வன்முறை கட்சி என குற்றம்சாட்டிய ராமதாஸ், செயல்படுத்த முடியாத திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது என்றும் விமர்சித்தார்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் கதாநாயகன், கதாநாயகி என யாருமே இல்லை என்றும், காமெடியன் மட்டுமே உள்ளதாகவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment