தளபதி 63 படத்தின் டைட்டில் வெளியானது !!!!

  • நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “தளபதி 63” நடித்துவருகிறார்.
  • “தளபதி 63” படத்தை பற்றி அவரிடம் கேட்ட போது அவர் கூறிய ஒரே வார்த்தை வெறித்தனம்.

தளபதி விஜய் மாபெரும் நடிகராக வலம் வருகிறார்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “சர்கார் “திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் “தளபதி 63” நடித்துவருகிறார்.இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தை AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறதுஇப்படத்தில் கதிர், விவேக், யோகி பாபு,ஆனந்தராஜ்,டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் தெறி படத்தை பற்றி இயக்குனர் அட்லீ கேட்ட போது படத்தின் பாடல்கள் தெறி ஆக வந்துள்ளது என கூறினார்.அதே போல மெர்சல் படத்தை பற்றி கேட்டபோது போது மெர்சலாக வருது என்று கூறினார்.

அதே போல் இப்போது “தளபதி 63″ படத்தை பற்றி அவரிடம் கேட்ட போது அவர் கூறிய ஒரே வார்த்தை வெறித்தனம்.அதனால் படத்தின் பெயர்”வெறித்தனம்” இருக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

author avatar
murugan

Leave a Comment