முதலமைச்சர் ,அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ …!அரசியல்ரீதியான தலையீடுகள் இருக்கிறதா ..! டிடிவி தினகரன்

சிபிஐயில் அரசியல் ரீதியான தலையீடுகள் இருக்கிறதோ என்று நினைக்க தோன்றுகிறது  என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கூறுகையில், இந்தியாவின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.யில் நடைபெறும் நிகழ்வுகளும், அதன் உயர் அதிகாரிகள் மட்டத்தில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களும், நாடுமுழுவதும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில்,ரஃபேல் விமான பேர முறைக்கேடு தொடர்பான குற்றச்சாட்டும் சிபிஐ விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இதில் அரசியல்ரீதியான தலையீடுகள் இருக்கிறதோ என்று நினைக்கவே தோன்றுகிறது.இந்த சூழலில் சுதந்திரமான விசாரணை அமைப்பாக சி.பி.ஐ எப்படி செயல்படும்? என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment