மணமகனுக்கு 2-ம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

மணமகனின் கல்வி தகுதியை அறிந்து கொள்வதற்காக இரண்டாம் வாய்ப்பாடு சொல்ல சொல்லிய போது மணமகன் தவறாக சொல்லியதால் உத்திரபரதேச மாநிலத்தில் திருமணம் நிறுத்தத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மஹோபா என்னும் இடத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் மணமகன் திருமண மண்டபத்தை அடைந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தாலும், மணமகளுக்கு மணமகன் கல்வி தகுதி மீது சந்தேகம் எழுந்துள்ளது. படித்தவர் என்று கூறி தனக்கு திருமணம் செய்து வைக்க மணமகனின் உறவினர்கள் முயற்சிப்பதாக நினைத்த மணமகள் மணமகனின் கல்வித்தகுதியை சோதிக்க வேண்டும் என விரும்பினர்.

இதனையடுத்து இருவரும் மாலைகள் பரிமாறிக் கொண்டுள்ளனர். இருந்தாலும் மணமகனிடம் அதன் பின்பாக மணமகள் இரண்டாம் வாய்ப்பாடு கூறுமாறு சொல்லியுள்ளார். ஆனால், மணமகன் இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாமல் அதை தவறாக சொன்னதால் உடனடியாக மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும் கல்வி தகுதி இல்லாதவரை தன்னிடம் பொய் சொல்லி திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக திருமண மண்டபத்தில் இருந்து மணமகள் வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து காவல் அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி வினோத்குமார் அவர்கள் கூறுகையில், இது இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் மணமகன் படிக்காதவர் என்பதை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து கொள்ள முயற்சித்தால் மணமகள் வெளியேறி விட்டதாகவும், மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியவில்லை என்பதால் மணமகளின் உறவினர்களும் மணமகனை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து கூறிய மணமகளின் உறவினர், மணமகன் படிக்காதவர் என்பதை மறைத்து தங்கள் உறவுக்காரப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றது தவறு எனக் கூறியுள்ளனர். மேலும், அவர் பள்ளிக்கூடம் கூட சென்றிருக்க மாட்டார் போல, எங்களை ஏமாற்ற பார்த்து விட்டார்கள். ஆனால் நல்ல காலம் எங்களுடைய பெண் துணிச்சலாக திருமணத்தை நிறுத்தி விட்டு வெளியேறி விட்டார் என கூறியுள்ளனர். மணமகன் வீட்டில் இருந்து மணமகளுக்கு கொடுத்த பொருட்களையும், மணமகள் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளையும் திருப்பி கொடுக்க வேண்டும் என கிராமத்தினர் சார்பில் பேசி முடிக்கப்பட்டு உள்ளது.

author avatar
Rebekal