#BREAKING: 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் – தமிழக அரசு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த வரும் 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நிரந்தர பணிக்கு மாற்றப்பட்ட 1,212 செவிலியர்கள் சென்னையில் கொரோனா பணியில் ஈடுபடவுள்ளனர். பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரூ.15,000 சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடிவடைந்த நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் வரும் 10ஆம் தேதி முன்னதாக 1,212 பேரும் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 2015-16ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தர செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக அரசிடம் தொடர்ந்து செவிலியர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்