பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது -தமிழிசை

பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது என்று தமிழிசை தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக  பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தமிழிசை  கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது. நீட் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது தவறு. தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நீட் தேர்வு மாற்றியமைக்கப்படும்   என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment