மனதை கவர வரும் யுவனின் இசை! கார்த்தி – தமன்னாவின் அழகிய காதல்.. பையா ரீ-ரிலீஸ்….

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசென்னை, 3, ஆளவந்தான், முத்து, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் ஆனது.

மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆன இந்த திரைப்படங்களை மக்கள் கொண்டாடி தீர்த்தனர் என்றே சொல்லலாம். இதனால் ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருவதால் பல திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது பையா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அந்தர் பல்டி அடித்த சிவகார்த்திகேயன்!

இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பையா. இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் அந்த சமயம் முதல் இந்த சமயம் அவரை பலருடைய பேவரைட் ஆக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இந்த படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பையா படத்தை விரைவில் தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக வெளியான அறிவிப்பு மக்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. விரைவில் படம் எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்த ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.