அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி நடக்கிறது!! முதல்வர் பழனிசாமி கூறியது உண்மை!! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

  • நம் கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சியினர் பல்வேறு சதிகளை செய்து வருகின்றனர் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
  • அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி நடப்பதாக முதல்வர் பழனிசாமி கூறிய கருத்தில் உண்மை உள்ளது  என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதேபோல் நம் கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சியினர் பல்வேறு சதிகளை செய்து வருகின்றனர் என்று  முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Image result for pon radhakrishnan

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக கன்னியாகுமரியில்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த முயற்சி நடப்பதாக முதல்வர் பழனிசாமி கூறிய கருத்தில் உண்மை உள்ளது .எங்கள் கூட்டணியை பிளவுபடுத்த நடைபெறும் முயற்சி தோல்வியை சந்திக்கும் எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.

எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பம் விளைவிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை .திமுக கூட்டணியில் நால்வர் அணி இருக்கும் நிலையில் அவர்களே அந்த வேலையை செய்வார்கள். திமுகவை தாக்கு தாக்கு என தாக்கிய வைகோ தற்போது தாங்கு தாங்கு என தாங்குகிறார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment