திமுக துணைப் பொதுச் செயலாளராக வாய்ப்பளித்த தலைவருக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் நன்றி – கனிமொழி

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என கனிமொழி எம்.பி ட்வீட். 

திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திராவிடச் சித்தாந்தத்தின் வழி உதித்த பேரியக்கமான நம் திமு கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பளித்து, கழகப்பணியாற்ற வாய்ப்பளித்துள்ள கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment