தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!

தென் தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் அதி கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்து வரும் 24 மணிநேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்… வானிலை மையம் அறிவிப்பு!

இந்த சூழலில், தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்திருந்தார். இதனால் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழையால் நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு 1 லட்சம் கன அடிக்கு நீர்வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

விடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் தாமிரபரணில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து நீர் திறப்பால் தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் பாய்கிறது. மேலும், வெள்ளப் பெருக்கு காரணமாக நெல்லை – தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்