துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரை சந்திப்பு

துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை சந்தித்துள்ளார்.

அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என நீண்ட நாட்களாக கேள்வி வந்த நிலையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக முரண்பாடு எழுந்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  2 நாட்களாக அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள் சந்தித்தனர்.இந்நிலையில்  சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் அதிமுக எம்பி  தம்பிதுரை சந்தித்துள்ளார்.