தளபதி 64 -ல் இணைகிறார் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு ! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி 64 படத்தில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு இணைகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை  ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 64 படத்தைப் பற்றி, அடுத்த மூன்று நாட்களில் புதிய அப்டேட்டுகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி  விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் பெப்பே ‘தளபதி 64’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று  தளபதி 64 குறித்து அறிவிப்பு ஓன்று வெளியாகியானது.அதாவது இன்று  3 மணிக்கு ஒரு அறிவிப்பு ஒன்றும் 5 மணிக்கு அறிவிப்பு ஒன்றும் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.அதன்படி தற்போது விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனுவும் இப்படத்தில் இணைகிறார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது .