தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி! இன்று முதல் தலைவர்-168 ஷூட்டிங் ஆரம்பம்!

  • சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.
  • அடுத்ததாக ரஜினியின்-168 வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தினை தொடர்ந்து அவர் தனது 168 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடிக்க உள்ளனர்.

டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வெற்றி இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் வைத்து நடைபெற உள்ளதாம். இன்று முதல் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. அடுத்த வருட தீபாவளிக்கு திரைக்கு கொன்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.