தடுப்பூசி போட்டால் மாடு, தங்க நெக்லஸ் பரிசு எங்கு தெரியுமா ?

தாய்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்  ஒவ்வொரு வாரமும் மாடு பரிசு.

வடக்கு தாய்லாந்தின் ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

அதில் ரேஃபிள் கேம்பைன் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலும் நேரடியாக மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் இதன் மூலம் அந்த மாவட்டத்தின் குடியிருக்கும் நபர்களில் ஒருவருக்கு ஒவ்வொரு வாரமும் 319 டாலர் மதிப்புள்ள மாடுகளை வெல்ல முடியும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம் அடுத்த மாதத்திலிருந்து, சியாங் மாய் மாகாணத்தின் மே சேம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு  ஒவ்வொரு வாரமும் தோராயமாக 10,000 பாட் ($ 319) மதிப்புள்ள ஒரு இளம் பசுவை வெல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இது 24 வாரங்களுக்கு தொடரும்  என்றும், இந்த பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் எங்கள் தடுப்பூசி பதிவு எண்கள் ஓரிரு நாட்களில் ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மாவட்டத் தலைவர் பூன்லூ தம்தானுரக் கூறியுள்ளார்.

மேலும் தாய்லாந்தின் பிற மாகாணங்களும் தங்க நெக்லஸ், தள்ளுபடி கூப்பன்கள் போன்றவைகளுடன் தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆக்கபூர்வமான சலுகைகளை அறிவித்துள்ளனர்.