மீன்வள வாரியத்தில் நடப்பாண்டு புதியதாக பதிவு செய்தவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் – தமிழக ராசு

மீன்வள வாரியத்தில் நடப்பாண்டு புதியதாக பதிவு செய்தவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் கடல் மீன் வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த காலகட்டத்தில் வங்கக் கடலில் மீன்பிடிக்க தடை காலம் உள்ளது. இந்த இரண்டு மாத காலத்திற்கான நிவாரணத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண மூலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு லட்சத்து 72 ஆயிரம் மீனவர்கள் பலன் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, மீனவர்களுக்கான மீன்பிடி தடைகால நிவாரணத்திற்கு ₹87 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், மீன்வள வாரியத்தில் நடப்பாண்டு புதியதாக பதிவு செய்தவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.