பாஜக பிரபலத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதிகள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீர் அவர்கள் இன்று டெல்லி போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பினருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அந்த அமைப்பு இ-மெயில் மூலம் தனக்கு மிரட்டல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடுத்து கௌதம் கம்பீரின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.