ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு வினோத தண்டனை!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு வினோத தண்டனை வழங்கிய காவல்துறையினர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைராசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கை மீறி பொதுமக்கள் பலரும் விதிகளை மீறி வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் விதிகளை மீறி வெளியே சுற்றி திரிவோர் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இதையும் மீறி வெளியில் சுற்றி திரியும் இளைஞர்களுக்கு  காவல்துறையினர் பல தண்டனைகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹெண்ணையில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், வண்ணாரப்பேட்டை விதிகளை மீறி சுற்றி திரிந்த 10 இளைஞர்களை பிடித்த காவல்துறையினர், ‘வெளியேவரமாட்டோம் ‘ என ரிவர்ஸில் ஓட வைத்து நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.