டாஸ்மாக்கை 2 மணிநேரமாவது திறந்துவையுங்கள்.! உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த டாஸ்மாக் கடைகளை குறைந்தது ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது திறந்துவைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு சேர்ந்த வசந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், திடீரென மதுக்கடைகள் மூடப்பட்டதால், மது குடிப்பவர்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பு அதிகமாகி சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தி, மூளையை பாதிக்கச் செய்வதாக அமைந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும்.
மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மது கடைகளில் மது திருட்டு, கள்ளத்தனமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டாஸ்மாக் மூடப்பட்டதால், மெத்தனால், சானிடைசர், வார்னிஷ் உள்ளிட்டவைகளை குடித்து பலர் மரணித்துள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா அவர்கள் அடங்கிய அமர்வு, அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டத்தை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.