இனி இவர்களுக்கு மட்டுமே மதுபானம் – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.மேலும்,மக்கள் வெளியில் வரும் பொது முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது.
  • இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது.
  • அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை,கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்தல் வேண்டும்.
  • முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.