ஹார்வேர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக தாரளமாக நிதி வழங்கிய சவூதி வாழ் தமிழர்கள்…!!

அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைப்பதற்காக உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளும் நன்கொடை அளித்து வருகிறது.

சௌதிஅரேபியாவில் உள்ள ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் மற்றும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் சுமார் 5000ம் அமெரிக்க டாலர்களை முதலில் வழங்கியது, அதன் தொடர்ச்சியாக கடந்த 19-01-2018 அன்று மிகப்பெரிய அளிவில் முப்பெரும் விழா ஒன்றை நடத்தி அடுத்தகட்டமாக சுமார் 5000ஆம் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டியது. இறுதியில் மொத்தமாக ரியாத்வாழ் தமிழர்கள் சங்கம் சார்பாக இதுவரை 10,000 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரியாத்வாழ் தமிழர்கள் சங்கம் போல் தமாம் பகுதியில் வாழும் தமிழர்கள் சார்பில் தமிழ்நாடு சமூகநல அமைப்பு என்ற அமைப்பின் மூலமாக 3000 அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டியுள்ளார்கள், இவ்வாறாக சவூதி அரேபியா வாழும் தமிழர்கள் ஒன்றினைந்து ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்காக மொத்தம் 13,000 அமெரிக்க டாலர்கள் வழங்கியுள்ளார்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment