திருடுபவர்கள் திருடத்தான் செய்வார்கள்! தமிழ் ராக்கர்ஸ் ஆதரவு மீது சித்தார்த் பாய்ச்சல்….

மிலந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, சுரேஷ், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2017-ம் ஆண்டில் அனைத்து தரப்புக்கும் லாபம் கொடுத்த படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.
இந்நிலையில், டிஜிட்டலில் நெட் ப்ளிக்ஸ் இணையத்தில் இப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பதை சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு “தமிழ் ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டதில்லை ப்ரோ” என்று ரசிகர் ஒருவர் கூறினார். அவருக்கு பதிலடியாக சித்தார்த் “உங்க மூஞ்சுயெல்லாம் எங்க படத்தை காசுக் கொடுத்து பார்த்தால் எங்களுக்குத் தான் அசிங்கம். நீங்கள் தொடருங்கள். நன்றி” என்று கோபமாக தெரிவித்தார்.
சித்தார்த் பதிலுக்கு “உங்களுடைய பதில் மிகவும் முரட்டுத்தனமாக உள்ளது ப்ரோ” என்று ட்விட்டரில் உள்ளவர் கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலாக, ” நீங்கள் குழப்பத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. அவர் எவ்வாறு உள்ளார் என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது. திரைப்படத்துக்கான டிக்கெட் கட்டணம் பிற மாநிலங்களில் அதிகமாக உள்ளது. அதற்காக திரைப்படத்தை திருட்டுத்தனமாக பார்ப்பதற்கு கட்டணத்தை சாக்காக கூற முடியாது. இந்த உரையாடல் இப்பிரச்சினையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் விலை குறைக்கப்பட்டாலும் திருடுபவர்கள் திருடத்தான் செய்வார்கள்” என்று சித்தார்த் தெரிவித்திருக்கிறார்.
source: dinasuvadu.com

Leave a Comment