உயர்கல்வித் துறையில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் அன்பழகன் தகவல் !

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில இருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது , அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவிதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 48.9 சதவீதம் என்ற அளவில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தை உயர்கல்வி அதிகம் படித்த மாணவர்கள் எண்ணிக்கையில் தர்மபுரி மாவட்டம் 98.4 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்த திட்டங்களால் தேர்ச்சி விகிதத்தில் 11 வது இடத்தில இருந்து 5 வந்து இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.