தமிழ்வழியில் கோவின் இணைய வசதி ஏற்படுத்தி தரவேண்டும்…பிரதமரிடம் தமிழக எதிர்கட்சித் தலைவர் இ.பி.எஸ் வேண்டுகோள்!

கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையத்தில் தமிழ் மொழி சேர்க்க இ.பி.எஸ் வேண்டுகோள்….

இந்தியாவில் கொரோனா 2 வது அலை பேரழிவை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றிலிரந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்திவருகிறது.

இதைத்தொடர்ந்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் மக்கள் நோய் தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும் இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிகழ்வதால் 45 வயது மேற்பட்டோருக்கு முதலில் வழங்கப்பட்டு வந்த தடுப்பூசி தற்போது 18 வயது மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் கொரோனா தடுப்பூசியை பெற கோவின் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது, ஆனால் அதன் இணைய பக்கத்தில் 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன, இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் மத்திய அரசின் ‘கோவின்’ இணையதளத்தில் இந்தி, ஆங்கிலம் தவிர்த்து புதிதாக 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழி  இடம்பெறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் உடனடியாக தலையிட்டு தமிழ்வழியில் ‘கோவின்’ இணைய வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் பிரதமரின் ட்விட்டர் பக்கத்தை இணைத்து பதிவிட்டுள்ளார்.