தமிழக அரசு அதிரடி…. ரூ2000 சிறப்பு நிதி அறிவிப்பு…!!

16

தமிழக பட்ஜெட் சட்ட பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து இன்று சட்ட பேரவை இன்று தொடங்கியது.ஏற்கனவே பட்ஜெட் அறிவிக்கையில் தேர்தலை முன்னிட்டு கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் வறுமை கோடுகளுக்கு கீழ் உள்ள அமையப்பு சார தொழிலாளர்களுக்கு  சிறப்பு நிதியாக 2000 ரூபாய் அறிவித்துள்ளார். இதற்காக 60 லட்சம் குடும்பங்களுக்கு சுமார்  1200 கோடி செலவில் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து வகை தொழிலாளர்களுக்கு கிராமப்புறங்களில் வாழும் 35 லட்சம் ஏழை குடும்பங்களுக்கும் ,  நகர்ப்புறங்களில் உள்ள 25 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.