இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்…!

சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. 

கடந்த ஜூன் 21-ஆம் தேதி, தமிழகத்தில் திமுக தலைமையிலான 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  உரையுடன் தொடங்கப்பட்டது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், ஜூன் 24-ம் தேதியுடன் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதையடுத்து, இது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது தொடர்பாகவும்,  தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.