உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்த நாள்…!

உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்த நாள்…!

உலகளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம் மறைந்த நாள் வரலாற்றில் இன்று.

சண்முகம் பிள்ளை மற்றும் அருணாச்சல வடிவு ஆகியோருக்கு நாகர்கோவில் உள்ள கேசவன்புதூரில் ஆகஸ்ட் 19ஆம் தேதி 1929ஆம் ஆண்டு பிறந்த மகன் தான் ச. அகத்தியலிங்கனார். இவர் தனது இளங்கலை அறிவியல் கணக்கு படிப்பை நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் பயின்று, முதுகலை தமிழ் இலக்கியத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார். இவர் கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்திலும் இவர் மற்றொரு முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.

அதன் பின்பாக இவர் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் சில காலம் இணை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்த் துறையில் முதன்மையானவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் வரைந்துள்ளார்.

இவர் பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிஞராக பணியாற்றியுள்ளார். பணி ஓய்வு பெற்ற பின்பும் தனது வீட்டில் இருந்தபடியே பல்வேறு ஆய்வுகளையும் செய்துள்ளார். இதன் காரணமாக  உலக நாடுகள் இவரை அழைத்து பெருமைப்படுத்தி உள்ளது. பின் ச.அகத்தியலிங்கம் அவர்கள் புதுச்சேரி அருகிலுள்ள கிளியனூர் காமராசர் குடியிருப்பின் அருகில் நடைபெற்ற மகிழுந்து விபத்தில் சிக்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி 2008 திங்கள்கிழமை காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube