மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைய அனைவருக்கும் இனி ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் அவசியம்…!

தடுப்பூசி எடுத்து கொண்டவர்களும் இனிமேல் மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் நுழைய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதிலும் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும், அடுத்த கட்டமாக கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 ,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

டெல்டா வகை கொரோனா வைரஸ் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கும் – ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்!

டெல்டா வகை கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களையும் பாதிக்கும் என ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்த பாடில்லை. குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் இரண்டாம் அலை பரவத் தொடங்கி பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் முதன்முதலாக உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் … Read more

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50% தள்ளுபடி..!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 50% தள்ளுபடி என அறிவித்த தெலுங்கானாவை சேர்ந்த கடை உரிமையாளர். தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த அலங்காரப்பொருள் கடை உரிமையாளர் ஒருவர் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு பலரும் அலங்கார பொருட்கள், ராக்கி, பரிசுகள் ஆகியவற்றை வாங்க வருவார்கள். அவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் உள்ளவர்களுக்கு … Read more

தடுப்பூசி போடாத மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை – குவைத் அரசு!

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடாத குவைத் குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தாலும், அதே சமயம் மற்ற நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே, மக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு சில சலுகைகளையும் உலக … Read more

வார இறுதிக்குள் 160 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி – அமெரிக்கா இலக்கு!

இந்த வார இறுதிக்குள் 160 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் கூறியுள்ளார். உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி போடுவது ஒன்று தான் தீர்வு என மக்கள் நம்புகின்றனர். எனவே, மக்கள் பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிக … Read more

தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகளுக்கு அனுமதி – சுவிச்சர்லாந்து அரசு!

இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்திய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இன்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதி அளிக்கப்படும் என சுவிச்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் பல நாடுகள் இந்திய பயணிகள் தங்கள் நாடுகளுக்கு நுழைவதற்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தையும் பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் … Read more

தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது – மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் 1.01 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் 5.39 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் என்பதால் தடுப்பூசி போடுவதில் … Read more

தடுப்பூசி செலுத்தினால் 20 கிலோ அரிசி இலவசம் – அருணாச்சல பிரதேசத்தில் அறிவிப்பு!

 தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம் என அருணாச்சல பிரதேசத்தில் அறிவிப்பு. உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இவை செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தடுப்பூசி … Read more

தடுப்பூசி போட்டவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா வரலாம் – பிரான்ஸ் அரசு!

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுற்றுலாவிற்காக பிரான்ஸ் நாட்டிற்குள் வரலாம் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று … Read more

ரஷ்யாவில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

கொரோனா பாதிப்பு காரணமாக ரஷ்யாவில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ள நிலையில், தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் தான் தாக்கும் என கடந்த சில மாதங்கள் முன்பு வரை நம்பியிருந்த நிலையில், தற்பொழுது சிங்கங்கள், … Read more