ரஷ்யாவில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

ரஷ்யாவில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

கொரோனா பாதிப்பு காரணமாக ரஷ்யாவில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ள நிலையில், தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் தான் தாக்கும் என கடந்த சில மாதங்கள் முன்பு வரை நம்பியிருந்த நிலையில், தற்பொழுது சிங்கங்கள், குரங்குகள், நாய்கள் என செல்லப் பிராணிகளுக்கும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

இதனை அடுத்து விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக பலர் தங்களது செல்லப் பிராணிகளை துரத்தி விட்டு விடுகின்றனர். ஆனால் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை விட்டுவிட மனமில்லாமல் செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

இது குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலோரியா அவர்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். எனவே நீங்கள் வளர்க்கக்கூடிய நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை தெருக்களில் விட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், பலரும் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube