மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைய அனைவருக்கும் இனி ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் அவசியம்…!

மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைய அனைவருக்கும் இனி ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் அவசியம்…!

தடுப்பூசி எடுத்து கொண்டவர்களும் இனிமேல் மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் நுழைய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதிலும் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும், அடுத்த கட்டமாக கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 ,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இனிமேல் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் வரக்கூடிய ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் அனைவருக்குமே ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் கூட இந்தப் பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் அனுமதிக்கப் படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube