தடுப்பூசி போடாத மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை – குவைத் அரசு!

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடாத குவைத் குடிமக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தாலும், அதே சமயம் மற்ற நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே, மக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகிறது.

மேலும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு சில சலுகைகளையும் உலக நாடுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்ட குடிமக்கள் மட்டுமே ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என குவைத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் தடுப்பூசி போடுவதற்கு தடை விதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பயண தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இதுவரை அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 21.95 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

author avatar
Rebekal