தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

அந்தமான் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது, இதன் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. … Read more

சென்னையில் காலையில் வாட்டி வதைத்த வெயில்…மாலையில் மிதமான மழை.!

சென்னை உள்ளிட்ட மண்ணிவாக்கம், மற்றும் தாம்பரம்,  மணிமங்கலம் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில்,  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்பொழுது மண்ணிவாக்கம், மற்றும் தாம்பரம்,  மணிமங்கலம்  மற்றும் முடிச்சூர், போன்ற சுற்றுவட்டாரப் … Read more

தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல்!

பருவமழை பெய்து முடிந்த வந்த நிலையில், தற்போது மழையளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதில் கோத்தகிரி (நீலகிரி ), சத்தியமங்கலம் (ஈரோடு) ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையும், கிருஷ்னகிரி மாவட்டம் தளி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் ( ஈரோடு மாவட்டம்)  3 செ.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.