ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும்-தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆகவும், நகர பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விரைவு, சொகுசு பஸ்களிலும் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.நேற்று அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி … Read more

மாற்றுதிறனாளிகளுக்கு விளக்கிய அரசு பயிற்சி – தமிழக அரசு ஆணை

அரசுப் பணிக்கான அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பார்வை?, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெற வேண்டாம். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி பயிற்சி பெற வேண்டாம் என்றும் அதே சமயம் ஊன்றுகோல் உதவியுடன் நடப்போர், சக்கர நாற்காலி உதவியுடன் நடப்போர் பயிற்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.