நாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை!

பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகூரில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர், இவர் பெயர் சையத் அபுதாஹீர். இவர் தனது மாமனார் வீட்டிற்கு நாகூருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவரது, செல்போன் சிக்னல் மூலம் இலங்கைக்கு கால் சென்றுள்ளதால், இவரை பிடித்துள்ளதாக … Read more

pray for nesamani புகைப்படத்தை காவல்துறையினர் எப்படி பயன்படுத்தியுள்ளார்கள் தெரியுமா?

முகநூலில் சுத்தியல் புகைப்படத்தை வெளியிட்டு, அதற்க்கு பதிவிடப்பட்ட பதிலால், pray for nesamani என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்கள் முழுவதும் ட்ரெண்டானது. தற்போது, pray for nesamani என்ற வாசகம் அடிக்கப்பட்ட டி-ஷார்ட்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில், பலரும் பல விதமாக இதனை பயன்படுத்தினாலும், காவல்துறையினர் இதனை வித்தியாசமான முறையில் பயன்படுத்துகின்றனர். நேசமணி தலையில் சுத்தியல் விழுவது போன்ற புகைப்படத்தில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், விபத்துக்களை தவிர்க்க, தலைக்கவசம் அணிவீர் என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளனர்.

வன்கொடுமை வழக்குகளில்விதிகளைப் பின்பற்ற வேண்டும்..!! தமிழக டிஜிபிக்கு உத்தரவு..!!

வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்துமாறு தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டு பட்டுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் பாலத்காரம் செய்த வழக்கில் சுரேந்திரகுமார் என்பவருக்குத் தஞ்சாவூர் நீதிமன்றம் 7ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுரேந்திரகுமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி., அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரி விசாரிக்க … Read more