#BREAKING: லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் – ராஜ்நாத் சிங் ஆலோசனை.!

லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. இந்திய எல்லையான லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவ படைகள் முறியடித்த நிலையில், மீண்டும் பதற்றம் நிலவுவதால் ஆலோசனை … Read more

லடாக் எல்லை சூழல் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை.!

லடாக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருநாடுகளும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்குவது என சீன முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் 6-ம் தேதி முதல் படை விலக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதில், சீனா கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் தங்களது படைகளை நீக்கிவிட்டது. ஆனால், பங்கோங்சோ, தேப்சாங் உள்ளிட்ட … Read more

101 ராணுவத் தளவாடக் கருவிகளை இறக்குமதி செய்யத் தடை! ராஜ்நாத் சிங்.!

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில்  செயல்படுத்தும் வகையில் 101 ராணுவத் தளவாடக் கருவிகளை இறக்குமதி செய்யத் தடை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இறக்குமதிகள் மீதான தடை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து இந்திய பாதுகாப்புத் துறையினருக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கம், இதனால், அவர்கள் உள்நாட்டு தயாரிப்பை இலக்கை அடைய சிறந்த முறையில் தயாராக உள்ளனர் என ராஜ்நாத் சிங் … Read more

எப்போது அழைத்தாலும் தயாராக இருக்க வேண்டும் – ராஜ்நாத் சிங்.!

லடாக்கில் எல்லை பிரச்சனை தொடர்பாக பல முறை  பேச்சுவார்த்தை நடத்திய பின்னும் சீனா சில இடங்களில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா 2 கிமீ தூரத்திற்கு படைகளை பின்வாங்கி விட்டது. ஆனால், பாங்காங்  திசோ, கோக்ரா பகுதியில் இருந்து சீனா படைகளை பின் வாங்காமல் உள்ளது. சீனா லடாக் எல்லையில் என்ன திட்டம் நடத்தவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இந்தியா பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் … Read more

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி ராஜ்நாத் சிங் மரியாதை.!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தில் இந்திய – பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999-ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற கார்கில் போரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் நாட்டுக்காக தங்களது உயிரை இழந்தனர். ராணுவ வீரர்களுக்கு கவுரவிக்கும் விதமாகவும், அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இன்று கார்கில் நினைவு தினம் … Read more

பாலாக்கோட்டில் வான்வழித் தாக்குதல்.. லடாக்கில் விரைவாகப் படைகளை நிறுத்தியது. பாராட்டிய ராஜ்நாத் சிங்.!

கிழக்கு லடாக்கில் இந்தியாவும், சீனாவும் தங்கள் படைகளை நீக்கி வரும் நிலையில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இந்திய விமானப்படையின் உயர்மட்ட தளபதிகளிடம்  பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை மூன்று நாள் நடைபெறும். இன்று ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதிகளுக்கு ஆற்றிய உரையில், அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்திய விதம் மற்றும் கிழக்கு லடாக்கில் நிலவும் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் முன்னோக்கி பல இடங்களில் … Read more

எல்லைப் பிரச்சினை..எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என உத்தரவாதம் கொடுக்க முடியாது.. ராஜ்நாத் சிங்.!

எல்லைப் பிரச்சினையை எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் … Read more

#BREAKING: ராஜ்நாத் சிங் 2 நாள் லடாக் பயணம்.!

பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் லடாக்கிற்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிழக்கு லடாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி உள்ள இந்தியா -சீனா இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் சுமார் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலுக்கு பின்னர் முதல் முறையாக லடாக் எல்லையை பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவுள்ளதாக இரண்டு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது. … Read more

லடாக் பயணம் – மோடிக்கு நன்றி தெரிவித்த ராஜ்நாத் சிங் .!

லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி  ஆய்வு மேற்கொண்டார் அதற்க்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா  வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது. … Read more

#BREAKING: லடாக்கிற்கு ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வை.!

உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் சீன ஆக்கிரமிப்பைக் கருத்தில் கொண்டு கிழக்கு லடாக்கின் பாதுகாப்பு நிலைமைகளை  ஆய்வு செய்ய  வருகின்ற வெள்ளிக்கிழமை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோர்  லேவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.