பாலாக்கோட்டில் வான்வழித் தாக்குதல்.. லடாக்கில் விரைவாகப் படைகளை நிறுத்தியது. பாராட்டிய ராஜ்நாத் சிங்.!

கிழக்கு லடாக்கில் இந்தியாவும், சீனாவும் தங்கள் படைகளை நீக்கி வரும் நிலையில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இந்திய விமானப்படையின் உயர்மட்ட தளபதிகளிடம்  பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை மூன்று நாள் நடைபெறும்.

இன்று ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதிகளுக்கு ஆற்றிய உரையில், அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்திய விதம் மற்றும் கிழக்கு லடாக்கில் நிலவும் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் முன்னோக்கி பல இடங்களில் இந்திய விமானப்படை விரைவாகப் படைகளை நிறுத்தியதற்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

மேலும், கடந்த சில மாதங்களாக இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்களை பாராட்டினார்.  நாட்டின் இறையாண்மையைக் காக்க தேசத்தின் தீர்மானம் இராணுவத்தின் திறமையில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் உள்ளது. ஆயுதப்படைகளின் அனைத்து தேவைகளும், நிதி ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ பூர்த்தி செய்யப்படும் என்று அவர் தளபதிகளுக்கு உறுதியளித்தார்.

எல்.ஐ.சி விரிவாக்கத்திற்கான தற்போதைய முயற்சிகளை அவர் குறிப்பிட்டு ,எந்தவொரு நிகழ்வையும் கையாள தயாராக இருப்பதாகவும் கூறினார். 36 ரஃபேல் போர் விமானங்களில் குறைந்தது ஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதிக்குள் அம்பாலா விமான நிலையத்தில் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
murugan