Today Live : என்ஐஏ சோதனை முதல்… ராமேஸ்வரம் மீனவர்கள் கைது வரை….

NIA

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக ஹைதராபாத் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் சோதனை நடத்தி வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள்  நாளை மோதுகிறது என பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த நேரலை செய்தி குறிப்பில் காணலாம்.  

கொளத்தூரில் NIA அதிகாரிகள் சோதனை..!

NIA Raid

சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து  என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இன்று திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்! மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக ஹைதராபாத் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் சோதனை நடத்துகிறது.  ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகில் சந்திரா சென்னை கொளத்தூரில் … Read more

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்..!

Saattai Duraimurugan

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முயற்சித்ததாக என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு ஏஜென்சி) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2-ம் தேதி தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசை மதிவாணன்  உள்ளிட்ட பலர் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது  … Read more

கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ மனு!

NIA

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டிலை பற்றவைத்து வீசினார். இதை பார்த்த சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்பு … Read more

ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் .! NIA அதிகாரிகள் தீவிர சோதனை.! 

Chennai Raj bhavan - NIA Officials Investigation

கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிற்பகலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் எனும் ரவுடி பெட்ரோல் பாட்டில் உடன் வந்து அதனை பற்றவைத்து கேட் அருகே உள்ள தடுப்பு (பேரிகாட்) மீது வீசினார். அவர்  அடுத்த பாட்டில் பற்ற வைப்பதற்குள் சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை தடுத்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் … Read more

10 மாநிலங்களில் சோதனை.. 44 பேர் கைது.! என்ஐஏ அதிரடி.!

NIA raid

அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் அந்நாட்டு சேர்ந்தவர்கள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) நேற்று பல்வேறு மாநிலங்களில் சோதனைகளை மேற்கொண்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சோதனை செய்து இரண்டு பேரை கைது செய்தது. இந்த சோதனை தொடர்பாக தற்போது என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட செய்து குறிப்பில், இந்தியா – வங்கதேச எல்லை வழியாக வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் … Read more

இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர்… 4 பேரை கைது செய்த NIA அதிகாரிகள்.!

NIA raid in Tamilnadu and Puducherry

வங்கதேசத்தில் இருந்து இந்தியவுக்குள் சிலர் ஊடுருவியதாக எழுந்த புகாரின் பெயரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், முதற்கட்டமாக, சென்னை அருகே படப்பை பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திரிபுராவை சேர்ந்தவர் போன்று போலி அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார் என கூறப்படுகிறது. வயநாட்டில் நடந்த என்கவுன்டரில் 2 மாவோயிஸ்டுகள் கைது.. இருவர் தப்பியோட்டம்..! … Read more

கோவை கார் குண்டு வெடிப்பு – நசீரை நவ.17 வரை சிறையில் அடைக்க உத்தரவு!

CoimbatoreCarBlast

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நசீரை நவம்பர் 17 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, இவ்வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 15வது நபராக போத்தனூரை சேர்ந்த நசீரை என்ஐஏ கைது செய்தது. இந்த நிலையில், என்ஐஏவால் கைது செய்யப்பட்ட நசீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதி வரை … Read more

போலி பாஸ்போர்ட் விவகாரம்.? மதுரையில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை.!

NIA Officials search in Madurai

சமீப காலமாகவே தீவிரவாத கண்காணிப்புகள் குறித்து வழக்குகளை விசாரணை செய்யும் தேசிய புலனாய்வு அமைப்பான NIA இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை குக்கர் வெடிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்த சோதனை தீவிர படுத்தப்பட்டது. தற்போது NIA சோதனையானது மதுரையில் அதிகாலை நிலையை தொடங்கியுள்ளது. மதுரை காவல்துறையினர் பாதுகாப்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ள காஜிமார் தெருவில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு … Read more

2022-ல் 73 வழக்குகள், 456 பேர் கைது – என்ஐஏ

2022-ஆம் ஆண்டில் 73 வழக்குகள் பதிவு செய்து, 456 பேரை கைது செய்துள்ளது என்ஐஏ. 2022-ல் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது, இது 2021ல் பதிவு செய்யப்பட்ட 61 வழக்குகளில் இருந்து 20% அதிகமாகும். இந்த எண்ணிக்கை என்ஐஏ-க்கு முன்னெப்போதும் இல்லாத உயர்வாகும். இந்த வழக்குகளில் 11 ஜம்மு காஷ்மீர், 10 இடதுசாரி தீவிரவாதம், ஏழு தடை செய்யப்பட்ட PFI உடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டில் 456 … Read more