விஜயவாடாவில் இருந்து 5 குழுக்கள் தமிழகம் வருகை.. மீட்பு, நிவாரணத்துக்கான உதவி எண்கள் அறிவிப்பு!

ndrf

மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், புயல் மீட்பு பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து 5 குழுக்களை சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, விஜயவாடாவில் வந்துள்ள … Read more

ஆந்திரா : கனமழை மற்றும் வெள்ளத்தால் 14 பேர் உயிரிழப்பு ..!

ஆந்திராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 3.4 … Read more

தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் சேர்க்கப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட பெண்கள்!

உத்திரபிரதேச மாநிலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் புதியதாக 100 பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய பேரிடர் மேலாண்மையில் மீட்பு பணிக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் எஸ் என் பிரதான் அவர்கள் பெண்கள் முழுமையான மீட்பு பணியாளராக பயிற்றுவிக்கபடுவார்கள் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்தரப்பிரதேச அரசு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரை அழைத்தபோது பெண்கள்தான் அங்கு சென்று மீட்பு … Read more