மியான்மரில் இராணுவத்தினரின் சதி…! சேட்டிலைட் டிவி சேனல்களுக்கு தடை…! இணையம் மற்றும் ஊடகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு…!

மியான்மரில் செயற்கைகோள் தொலைகாட்சிக்கு தடை. இணையம் மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு.  மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசு கலைக்கப்பட்டு, பின் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மரில் உள்ள ஜனநாயக குரல் பர்மா … Read more

மியான்மர் வன்முறை…! இது மிருகத்தனமான ஆட்சி…! – முன்னாள் அதிபர் பராக் ஒபாமா…!

ராணுவத்தின் சட்ட விரோத மற்றும் மிருகத்தனமான முயற்சி ஒருபோதும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.  மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மீண்டும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி நிலையில், இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேலும் ஆங்சாங் சுகி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ராணுவத்தினரால் சிறை வைக்கப்பட்ட நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தை இராணுவத்தினர் … Read more

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு பின் இதுவரை 740 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

மியான்மரில் ராணுவ ஆட்சி மாற்றப்பட்டதில் இருந்து இதுவரை 740 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே … Read more

மியான்மரில் ராணுவத்தினர் துப்பாக்கிசூடு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 557-ஆக உயர்வு!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது. அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து, ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. பின்னர் ஆங் … Read more

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்.. ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் நேற்று ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உட்பட 114 பேர் உயிரிழந்தனர். மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது. அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து, ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் வெற்றி பெற்ற ஆங் … Read more

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் வன்முறை.! 38-க்கும் மேற்பட்டோர் பலி.!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை சுமார் ‌38-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஐ.நா சபை தூதர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில் மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது.ஆனால் அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . அதன் பின் கடந்த பிப்ரவரியில் வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியின் கட்சியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்து … Read more

மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை -அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி ,அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட  தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மியான்மரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்தது ராணுவம்.மேலும் மியான்மரில் உள்ள ஆங் சான் சூச்சி ,அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தேர்தல் முறையாக நடைபெற்ற பின்னர் ஆட்சி திரும்பி அளிக்கப்படும் என்று ராணுவம் தரப்பில் தகவல் … Read more

மியான்மரில் சமூகவலைத்தள சேவைகள் முடக்கம்…!

மியான்மரில் போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. மியான்மரில் ராணுவத்திற்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தற்போது ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து, அங்கு சமூகவலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில்,  அங்கு போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. மேலும்,  அந்நாட்டு அரசுக்கு சொந்தமான  தொலைதொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், முக … Read more

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு!

மியான்மர் நாட்டில் உள்ள மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டபோது அங்கிருந்த மண் குவியல் தொழிலாளர்கள் மீது விழுந்தது. அந்த விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அங்கு … Read more