லக்கிம்பூர் கெரி வன்முறை : விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் நியமனம்!

லக்கிம்பூர் கெரி வன்முறை விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின்  அவர்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள், ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச … Read more

விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சட்டீஸ்கர் முதல்வர்..!

லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சத்தீஸ்கர் முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.  உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று லக்னோ விமான நிலையத்திற்கு வந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற போது அதிகாரிகளால் … Read more

மத்திய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு..!

விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் புகுந்தது. லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில் உத்தரபிரதேச துணை முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு … Read more