500 ரூபாய்க்கு 19 வகை பொருட்கள் தொகுப்பு ! – காஞ்சிபுரம் ஆட்சியர் திறப்பு

காஞ்சிபுரம் : காவலன் கேட் ரேஷன் கடையில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.500 மதிப்பில் 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஆட்சியர் பொன்னையா திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் கூட்டுறவுத் துறையின் கீழுள்ள 620 ரேஷன் கடைகளிலும்  ரூ-500 மதிப்பிலான  19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இதற்கு குடும்ப அட்டைகள் ஏதும் தேவையில்லை”என்றும் கூறியுள்ளார்.

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த புனிதா குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் கலெக்டர் நிதியுதவி…!!

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலை காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த புனிதா குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்.