பிக்பாஸ் சீசன் – 4ல் கலந்து கொள்ளும் கவர்ச்சி நடிகை.!

பிக்பாஸ் சீசன் 4ல் பிரபல கவர்ச்சி நடிகையான கிரண் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். . மேலும் சமீபத்தில் கமல்ஹாசன் தனது … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் இதுதானாம்.! அவரே கூறிய தகவல்.!

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தை தான் இயக்க போவதாக கூறப்படுகிறது. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் … Read more

உங்கள் குரல் மீண்டும் ஒலித்திட வேண்டும் அன்னைய்யா.! SPB-க்காக உலகநாயகனின் உருக்கமான பதிவு.!

உங்கள் குரல் மீண்டும் ஒலித்திட வேண்டும், மீண்டும் வாருங்கள் என்று உலகநாயகன் கமல்ஹாசன் எஸ். பி. பாலசுப்பிரமணியமிற்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து காய்ச்சல் குறைந்ததாகவும், இரண்டு தினங்களில் வீடு திரும்பி விடுவேன் என்று கூறிய அவருக்கு கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

சிறு நகரத்திலிருந்து வந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்த தல தோனி.! உலகநாயகனின் ட்வீட்.!

தல தோனி குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஆம் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து ரசிகர்கள் உட்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தோனியை குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தல தோனி குறித்து … Read more

கமலின் மகள் நடிக்க ஆசைப்படும் கேரக்டர்.!

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் இனி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் உலகநாயகனின் மகளான ஸ்ருதிஹாசன். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு அண்மையில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனையடுத்து, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் … Read more

புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் பயில்வது மட்டும் கல்வி அல்ல.! உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு கமல் செய்த ட்வீட்.!

புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் பயில்வது மட்டும் கல்வி அல்ல, இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என கமல் ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜூலை 15ம் தேதி உலக இளைஞர்கள் திறன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் தலைவர்களும்,பிரபலங்களும் இளைஞர்களின் திறமையை குறித்தும், இன்றைய கல்வியை குறித்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் … Read more

OTT-க்காக படத்தை உருவாக்கவிருக்கும் உலகநாயகன்.!

கமல்ஹாசன் ஓடிடி பிளாட்பாரத்திற்காக படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதனையடுத்து தலைவன் இருக்கின்றான் படத்தையும், ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தையும் தயாரிக்கவுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் ஓடிடி பிளாட்பாரத்திற்காக குறும்படங்கள், வெப் சீரிஸ் என நடித்தும், இயக்கியும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் அவர்களும் ஓடிடி பிளாட்பாரத்திற்காக … Read more

சிறுநீரக நோயால் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலம்.! உதவிய சூப்பர் ஸ்டார்.!

பொன்னம்பலம் சிறுநீரக நோயால் மருத்துவமனையில் சிகிச்சை வருவதை அடுத்து, அவருக்கு கமல்ஹாசன் உதவியதை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களும் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய பொன்னம்பலம் நாளடைவில் சினிமாவில் நடிகராகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவியதோடு, பொன்னம்பலம் … Read more

கமலின் இந்தியன் – 2 படத்தினை குறித்த மாஸ்ஸான அப்டேட்.! 

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கரின் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்தது. அப்போது  இப்படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல பேர் காயமடைந்தனர் . இச்சம்பவம் சினிமா துறையில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக … Read more

ம.நீ.ம தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  விசாரித்து வருகிறது . அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் காவல்துறை மக்கள் மீது செய்யும் அத்துமீறல்களை விசாரிக்க நிலையான அமைப்பை வேண்டி மக்கள் நீதி மய்யம் … Read more