சிறுநீரக நோயால் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலம்.! உதவிய சூப்பர் ஸ்டார்.!

பொன்னம்பலம் சிறுநீரக நோயால் மருத்துவமனையில் சிகிச்சை வருவதை அடுத்து, அவருக்கு கமல்ஹாசன் உதவியதை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களும் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுள்ளார்.

ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய பொன்னம்பலம் நாளடைவில் சினிமாவில் நடிகராகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவியதோடு, பொன்னம்பலம் அவர்களின் இரு குழந்தைகளின் படிப்பு செலவையும் கமல்ஹாசன் ஏற்று கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொன்னம்பலம் அவர்களின் சிகிச்சைக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் உதவியுள்ளார். இதுகுறித்து பொன்னம்பலம் கூறுகையில், எனது இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டது என்றும், அதற்கான சிகிச்சையை பெற்று வருகிறேன். மேலும் கமல் சார் எனது மகள் மற்றும் மகனின் படிப்பு செலவை ஏற்று கொண்டதாகவும், ரஜினி சார் எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.