“ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமம்”- அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமமாகக் கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதனால்,கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது.ஏனெனில்,கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறப்பதை விட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் முறையான சிகிச்சை கிடைக்காமல் இறப்பவர்களே அதிகமாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து,உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலரால் பல்வேறு … Read more