மார்க்கஸ் என்ற புயல் மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லேவை புரட்டிப் போட்டது!

மார்க்கஸ் என்ற புயல்  மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரமான கிம்பர்லேவை புரட்டிப் போட்டது. டைமர் கடல் பகுதியில் உருவாகி, மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய மார்க்கஸ் புயலால் மரங்கள் வேரோடு தூக்கி வீசப்பட்டன. வீடுகளின் மேற்கூரைகள், மின்கம்பங்கள் ஆகியவை முற்றிலும் சேதமடைந்தன. புயலைத் தொடர்ந்து கிம்பர்லே பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அவசரகால பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.